Wednesday, August 25, 2010

சிவவாக்கியர்

நீளவீடு கட்டி நீர் நெடுங்கதவு சாத்துவீர்
வாழவேண்டும் என்றலோ எண்ணியிருந்த மாந்தர்காள்
காலன் ஓலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மை பாதம் உண்மையே!

தேவாரம்

தந்தையார் போயினர் தாயாரும் போயினர் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்த ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே!